ஹர ஹர மஹாதேவகி படம் எடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் தான் ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார். இதன் அதிகரிப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

har hara mahadevaki

சந்தோஷ் P ஜெயக்குமார்

கெளதம் காத்திக், நிக்கி கல்ராணி கூட்டணியில் புது முக இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் எடுத்த படம் ஹர ஹர மஹாதேவகி. அடல்ட் காமெடி வகையறா இப்படம். இளசுகள் மட்டும் இன்றி பெருசுகள் மத்தியிலும் நல்ல ரீச் ஆனது படம்.

Team Iruttu Arayil Murattu Kutthu

இதனை அடுத்து அதே டீமுடன் களம் இரங்கப் போவதாக சொன்னார் இயக்குனர். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று மீண்டும் ஒரு ஏடாகூட டைட்டில் வைத்தார். முதல் லுக் போஸ்டர் படு கில்மாவாக இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் விறு விறுப்பாக நடந்து வருகிறது.


சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் பிறந்த நாளை கொண்டாடினார் இயக்குனர்.

ஆர்யா

சில நாட்களுக்கு முன் தான் ஆர்யா, “போன வாரம் ஜிம்ல நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா பேசிக்கிட்டு இருந்த விஷயம், வீடியோவா லீக் ஆகிடுச்சு. அது எனக்குத் தெரியாம என் ஃபிரெண்ட்ஸ் விளையாட்டுத்தனமா பண்ண ஒரு விஷயம். ஆனால், அதுல பேசுன எல்லா விஷயங்களும் உண்மைதான். கல்யாணத்துக்காக பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன்.” என்று இணையத்தளம் ஒன்று உருவாக்கி திருமணத்துக்கு பெண் தேடினார்.

அதிகம் படித்தவை:  பாக்ஸ்ஆபீஸ்! நெட் வசூலில் பாகுபலி புதிய பிரம்மாண்ட சாதனை
ARYA

கைவசம் அமீர் இயக்கம் சந்தனதேவன், இப்படத்தின் தயாரிப்பாளரும் ஆர்யா தான். சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். இந்தப்படம் தள்ளி போகும் காரணத்தால், தற்பொழுது வேறு படத்தில் கமிட் ஆகிறார் ஆர்யா.

ஸ்டூடியோ க்ரீன்

சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கும் மூன்றாவது படம். ஸ்டூடியோ க்ரீன், ஞான வேல் ராஜா தயாரிக்கும் 12 வது படத்தில் தான் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ 10 கோடி.!அவரை உயிரோடு கொளுத்தினால் ரூ 1 கோடி.! பகீரங்க மிரட்டல்.!
STUDIO GREEN

ஹீரோயினாக ‘வனமகன்’ படத்தில் நடித்தவரும், தற்பொழுது விஜய்சேதுபதியுடன் ‘ஜுங்கா’, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவருமான சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை பல்லு கவனிக்கிறார். படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம்.

Santhosh P Jayakumar , KE Gnana Vel Raja & Actor Arya
சினிமாபேட்டை கிசு கிசு

எங்கு தன்னை “ஏ” பட இயக்குனர் என்று சித்தரித்து விடுவார்களோ !! என்று நினைத்த இயக்குனர் தன் ட்விட்டரில் இது பேமிலி யுடன் பார்க்கும் ஜாலி படம் என்று சொல்லியுள்ளார்.