விநாயகர் சதுர்த்தி அன்று டிவியில் சார்பட்டா பரம்பரை.. இன்னும் 50 நாள் கூட ஆகல!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் படத்திற்குப் பின் இப்படம் அனைவரும் ரசிக்கும் படமாக இருந்தது.

இந்தப்படம் 1970களில் வடசென்னையில் இருந்த குத்துச்சண்டை பற்றியும் அங்குள்ள அரசியல், கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கிறது. மேலும் இந்த குத்து சண்டை போட்டியில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என்று இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி பிரபலமாக பேசப்படுகிறது.

இத்திரைப்படத்தில் அனைத்து காட்சிகளும் தத்ரூபமாக இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் பாத்திரங்கள் மிக கச்சிதம். கடந்த சில நாட்களாகவே ரங்கன் வாத்தியாரை வைத்து நிறைய மீம்ஸ்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த கேரக்டர் மூலமாக நடிகர் பசுபதி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிட்டார் என கூறுகிறார்கள்.

sarpatta-cinemapettai
sarpatta-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ஆர்யாவுக்கும் இந்த படம் மார்க்கெட் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. ராஜா ராணிக்குப் பின் ஆர்யாவுக்கு இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சார்பட்டா பரம்பரை படத்தை தியேட்டரில் ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இத்திரைப்படம் ரசிகர்களின் பாராட்டு மட்டுமின்றி திரையுலகினர் பாராட்டையும் வெகுவாக பெற்றிருக்கிறது. அதேபோல் ஒரு சில சர்ச்சைகளையும் சமாளித்து வருகிறது. இந்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் திமுகவிற்கு சாதகமாக இருப்பது போல அமைந்திருக்கிறது.

சமீபத்தில் கலைஞர் டிவி சார்பட்டா பரம்பரை படத்தின் சாட்டிலைட் உரிமையை ஏழரை கோடிக்கு வாங்கியுள்ளது. ஆர்யா இதுவரை நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமைகளை விட இது பல கோடிகளை அதிகமாக பெற்றுள்ளதாம். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் செப்டம்பர் 10 ஆம் தேதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக்கும் என சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகி இன்னும் 50 நாள் கூட ஆகவில்லை. அதுக்குள்லேயேவா இம்மாம் பேச்சு அடிபடுது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்