ஆர்யா சினிமாவில் பிஸியாக இருந்தாலும் புதிய சின்ன திரை சானலில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சில் கலந்து கொள்கிறார்.

ஆர்யா

arya

ஆர்யா அடிக்கடி எதாவது செய்து “யார்யா” என்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிடுவார். கடந்த நவம்பர் மாதம் ஆர்யா ஜிம்மில் தனக்கு பெண்ணே கிடைக்கவில்லை என்று புலம்பிய வீடியோ வைரல் ஆனது. மேலும் அடுத்த நாள் தன் ட்விட்டரில் தன்னை திருமணம் செய்ய விரும்புவார்கள் இந்த இணையத்தில் தங்கள் போட்டோ அல்லது வீடியோ இந்த லிங்கில் சென்று அப்லோட் செய்யலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

arya

கலர்ஸ் தமிழ்

முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்று கலர்ஸ் நிறுவன குரூப். இந்தியாவில் 30, வெளிநாடுகளில் 13 . மொத்தம் 8 மொழிகளில் 43 சேனல்களை நடத்தி வருபவர்கள். டப்பிங் தொடரான நாகினி இவர்களின் தயாரிப்பே. ‘கலர்ஸ் மராத்தி’, ‘கலர்ஸ் ஒடியா’, ‘கலர்ஸ் கன்னடா’ என்ற வரிசையில் ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் வரும் பிப் 19 ஆரம்பிக்கிறார்கள்.

colors tamil

‘சிவகாமி’, ‘வேலுநாச்சி’, ‘பேரழகி’ ஆகிய மூன்று சீரியல்கள். ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ ஆகிய இரண்டு ரியாலிட்டி ஷோக்கள், ‘காக்கும் தெய்வம் காளி’, ‘நாகினி-2’ என இரண்டு டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை

சேனலின் பிராண்ட் அம்பாசிடர் ஆர்யா தானாம். ஆர்யா பங்கேற்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும். இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க தான் ஆர்யா பெண்களை பதிவு செய்ய சொல்லியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Enga Veetu Mapillai – ARYA

ஆர்யாவைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் என பல ஆயிரம் பெண்கள் பதிவு செய்தனராம். பதிவு செய்தவர்களை ஃபில்டர் செய்து இறுதியில் 16 பேர் தேர்வாகி உள்ளனராம். இவர்களுடன் ஆர்யா நடத்தகும் கிண்டல், கேலி, கடலை, கலகலப்பு தான் நிகழ்ச்சி. இறுதியில் தன் மனதிற்கு பிடித்த பெண்ணை ஆர்யா கண்டுகொள்வாரா, அவரை திருமணம் செய்வாரா என பொறுத்திருந்து நிகழ்ச்சியை பார்த்து தெரிந்தும் கொள்ளவேண்டியது தான்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

ஆர்யாவை திருமணம் செய்ய விரும்பி பதிவு செய்தவர்களில் டாக்டர்களின் கணக்கு தான் அதிகமாம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இந்த மாடர்ன் சுயம்வரத்தில் பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டு பின்னர் நடிகர் சங்க கட்டிடம் உருவான பின் விஷால் முன்னிலையில் தான் கல்யாணம் செய்து கொள்வாரோ ஆர்யா ???