Fitnessல் வெறிபிடித்த ஆர்வம் கொண்டவர் நடிகர் ஆர்யா. இரண்டாம் உலகம், கடம்பன் போன்ற படங்களில் தனது உடலை மெருகேற்றி காட்டி இருப்பார். தினமும் உடற்பயிற்சி, டயட் சாப்பாடு, நீச்சல் என்று அனைத்தையும் தவறாது கடைபிடிப்பவர். இது மட்டுமல்லாமல் அவரது Favorite விஷயம் ஒன்று உள்ளது.

arya_cinemaPettaiஅது என்னவென்றால் மிதிவண்டியில் பயணம் செய்வது. தினமும் Fitnessசிற்காக பல கி.மி மிதிவண்டியில் பயணம் செல்வது இவருக்கு மிகவும் பிடித்த ஹாப்பிட்டாம்.

அதுமட்டுமில்லாமல் லண்டனில் நடக்கும் மிதிவண்டி போட்டியில் இவர் கலந்துகொள்கிறார். பயண தூரம் ரொம்ப இல்லைங்க ரொம்ப குறைவுதான். வெறும் 1450 கி.மீ தான். இது ரஜினியின் அடுத்த படமான 2.0 Promotionகாக நடத்தப்படுவதை செய்தி வெளிவந்துள்ளது.

London Edinburgh London 2017 எனப்படும் இந்த போட்டியில் உலகளவில் பல்வேறு நாட்டினர் கலந்துகொள்கின்றனர். இது பற்றி மிகுந்த களிப்போடு பல புகைப்படங்களை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டிக்காக ஆர்யாவை உற்சாகப்படுத்தி ஆசி அளித்திருப்பது வேற யாருமில்லைங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும், பாலிவுட் சூப்பர் ஹீரோ அக்க்ஷைகுமாரும்தாங்க.

சும்மாவே ஆர்யா அந்த ஓட்டு ஓட்டுவாரு இதுல தலைவர்கிட்ட ஆசி வேற வாங்கியாச்சு சொல்லவா வேணும்

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்களுக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் 1450 கி.மீ சைக்கிள் ஒட்டுனா சீட்டு கிழிஞ்சுராது?