சார்பட்டா படத்தை சுமாராக விமர்சனம் செய்த ரசிகர்.. அவசரத்தில் லைக் போட்டு மாட்டிக்கொண்ட ஆர்யா

கடந்த மாதம் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி ஆகா ஓகோவென வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

மேலும் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் படத்தின் இயக்குனரான பா ரஞ்ஜித்தை ரசிகர்கள் இவ்வளவுதான் இல்லை எனும் அளவுக்கு கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

மேலும் ரங்கன் வாத்தியார் மற்றும் ஆர்யா இருவரும் சைக்கிளில் செல்லும் காட்சி கூட பலநாள் டிரண்டிங்கில் மீம்ஸ் கிரியேட்டர்களால் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சார்பட்டா பரம்பரை என்ற பெயரைப் பார்த்தாலே சமூக வலைதளங்களில் லைக் போட்டு வந்தார் ஆர்யா.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்து விட்டு அதற்கான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். படத்தில் முதல் 90 நிமிட காட்சிகள் மட்டுமே சிறப்பாக இருப்பதாகவும், மீதி அனைத்துமே அரசியல் சர்ச்சை, கத்துவது, பாடல்கள் என்று மொக்கை போடுகிறது என தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

இதை உண்மையில் ஆர்யா படித்துப் பார்த்து தான் அந்த விமர்சனத்திற்கு லைட் போட்டாரா என்பது தெரியவில்லை. ஆர்வக்கோளாறில் போட்டு விட்டார் போல. அதைக் கண்டுபிடித்த நெட்டிசன் ஒருவர், ஆர்யா, உண்மையாவே இந்த விமர்சனத்தை படித்து பார்த்துதான் லைக் போட்டயா? என்று கேட்டுள்ளார்.

arya-liked-tweet
arya-liked-tweet

அதற்கு ஆர்யாவும், எஸ் பிரோ என பதிலளித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆர்வக்கோளாறில் செய்துவிட்டு எப்படி சமாளிக்கிறார் பாருங்கள் என ஆர்யாவை இணையத்தில் வச்சு செய்து வருகின்றனர்.