fbpx
Connect with us

Cinemapettai

இது ஆர்யாவா? இல்ல அர்னால்டா? முறுக்கு மீசை, சிக்ஸ் பேக்கில் ஆளே மாறிப்போன ஆர்யா

arya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது ஆர்யாவா? இல்ல அர்னால்டா? முறுக்கு மீசை, சிக்ஸ் பேக்கில் ஆளே மாறிப்போன ஆர்யா

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா. ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பிறகு தன்னுடைய திறமையை புரிந்துகொண்டு சில நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு ஆர்யாவின் ரேஞ்சே வேற மாதிரி சென்று விட்டது என்றே சொல்லலாம். அப்படி ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரம். அதன்பிறகு பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்த்தால் கதை தேர்வில் சொதப்பி தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து ரசிகர்களை சலிப்படைய வைத்தார்.

arya

arya

சரி ஆர்யாவின் கதி அவ்வளவுதான் நினைக்கையில் திடீரென பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற காமெடி படத்தினை கொடுத்து மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். அதன் பிறகாவது நல்ல திரைப்படங்களை கொடுப்பார் என்று பார்த்தால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதை போல் ஆகிவிட்டது அவரது சினிமா வாழ்க்கை.

நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த அதற்கு கடந்த வருடம் வெளியான மகா முனி திரைப்படம் ஆர்யாவுக்கு நல்லதொரு பெயரைக் கொடுத்தது. தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா. விரைவில் அவர் நடிப்பில் டெடி என்ற படம் வெளியாக உள்ளது. படம் ஹிட்டாகிறதோ இல்லையோ எப்போதுமே தன்னுடைய உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கண்ணும் கருத்துமாக செயல்படுபவர் ஆர்யா.

இந்நிலையில் முறுக்கேற்றிய உடம்புடன் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள போட்டோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

arya

arya

நேற்று  பின்பக்கம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இன்று முன்பக்கம் முறுக்கு மீசை, சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று 5 மணி அளவில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று ஆர்யாவின் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறியிருக்கிறார். அது கண்டிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top