கார் வரி ஏய்ப்பு பிரச்சனையில் சிக்கி இருக்கும் அமலா பாலை, நடிகர் ஆர்யா டுவிட்டரில் கிண்டலடித்து வம்புக்கு இழுத்திருக்கிறார்.

அமலாபால் கார் வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் இது பற்றி அவரது இன்ஸ்டாகிராமில் கூறிய அவர், “தேவையற்ற யூகங்களில் இருந்து வெளியே வர இப்போது படகில் பயணம் செய்ய விரும்புகிறேன்.

அது சட்டத்தை மீறி விட்டேன் என்ற குற்றச்சாட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த நடிகர் ஆர்யா, ‘சாலை வரியை மிச்சப்படுத்தி படகில் போகலாம்’ என்று அமலாபால் கார் வரி ஏய்ப்பு செய்ததை கிண்டலாக டுவிட்டரில் தெரிவித்தார்.

உடனே அமலாபால், ‘உடம்பை வருத்தி ஓடி, சைக்கிள் ஓட்டி நீங்களும் தானே காசை சேமிக்கிறீர்கள்’ என்று ஆர்யாவை கேலி செய்தார்.

இதை படித்த ஆர்யா, ‘உனக்காகத்தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா’ என்று குறிப்பிட்டு அவரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

மேலும் ‘டுவிட்டை’ தொடர்ந்தால் விபரீதம் ஏற்படும் என்று கருதிய அமலாபால், ‘பதில் சொல்லி கிண்டல் செய்தது போதும்’ என்று கூறி ஆர்யாவிடம் இருந்து தப்பி இருக்கிறார்.