Connect with us
Cinemapettai

Cinemapettai

arya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

8 வருடம் கழித்து படம் இயக்கும் எதார்த்த இயக்குனர்.. மாதவன் போய் ஆர்யா வந்துட்டாரு!

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவின் சினிமா கேரியர் வெகுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் அவரை வைத்து படம் இயக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் ஆர்யாவின் சினிமா நிலைமை ரொம்ப பரிதாபமாக இருந்தது. ஆனால் கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன.

ஆர்யாவின் டெடி படம் வெளியான ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பேர் பார்த்த படமாக மாறியது. அதேபோல் அமேசான் தளத்தில் அதிகம் பேர் பார்த்த படமாக மாறியுள்ளது சார்பட்டா பரம்பரை.

இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் நற்பெயர் வைத்திருக்கும் ஆர்யா முதல் முறையாக எதார்த்த இயக்குநர் கரு பழனியப்பன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள செய்திதான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரு பழனியப்பன் கடைசியாக 2013ம் ஆண்டு பார்த்திபன் மற்றும் விமல் நடித்த ஜன்னல் ஓரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் இயக்கத்தில் ஆர்வம் காட்டாத கரு பழனியப்பன் கடைசியாக நட்பே துணை என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது முதல் முறையாக இந்த கூட்டணி இணைவதால் புரட்சிகரமான படமாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பே மாதவன் நடிப்பில் வரவேண்டிய இந்த படம் தற்போது ஆர்யாவின் கைக்கு மாறியுள்ளது.

karu-pazhamiyappan-cinemapettai

karu-pazhamiyappan-cinemapettai

Continue Reading
To Top