Videos | வீடியோக்கள்
கரடி பொம்மையுடன் அட்டகாசம் செய்யும் ஆர்யா.. சூப்பராக வந்திருக்கும் டெடி டீசர் வீடியோ
நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ரெடியாகும் ஆர்யா படம் டெடி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் அவர் மகள் ஆதனா தயாரிக்கின்றனர்.
வழக்கம் போல டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் சாயீஷா ஹீரோயின். சதிஷ் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் டெடி படத்திலிருந்து வெளியான என் இனிய தனிமையை மற்றும் நம்பியே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த படம் ஹாலிவுட் படத்தின் தழுவலா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
டெடி படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மகாமுனி படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆர்யா.
பொறுத்திருந்து பார்ப்போம். தேறுவாரா என்று!
டெடி டீஸர் லின்க்
