Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

படம் எப்படி இருக்கு பாஸ்? தாறுமாறான டெடி படத்தின் விமர்சனம்

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ள படம் டெடி.

கதை – விபத்தில் சிக்கியவருக்கு உதவ போக, மெடிக்கல் மாபியாவிடம் சிக்குகிறார் சாயீஷா. இவரது ஆன்மா டெடி பொம்மைக்குள் செல்ல, உடம்பு மிஸ்ஸிங்.

அதீத மூளை ஸ்பீட் உள்ளவர் ஆர்யா. மூன்று வருடத்தில் ஒருவர் கற்பதை, செய்வதை இரண்டே மாதத்தில் முடித்துக் காட்டுபவர். 15, 20 வருட நிகழ்வுகளை அச்சு எடுத்து போல ஞாபகம் வைக்கும் திறன் உடையவர்.

டெடி இவரிடம் வர சூடு பிடிக்கிறது திரைக்கதை. டெடி பண்ணும் லூட்டி, கிரிப் ஆசாமி ஆர்யா காதல் வயப்படுவது என ஒருபுறம் கதை செல்ல மறுபுறம் வெளிநாடு, அங்கு நடக்கும் மெடிக்கல் பிராட் என பல விஷயங்களை படத்தில் புகுத்தியுள்ளார் இயக்குனர்.

teddy-cinemapettai

teddy-cinemapettai

இறுதியில் வில்லன் க்ரூப் அழிய ஆர்யா – சாயீஷா ஜோடி இணைவார்கள் தானே என நினைக்கும் நேரத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் படத்தை முடித்துள்ளார் இயக்குனர்.

சினிமாபேட்டை அலசல் – வழக்கம் போல ஹாலிவுட் கான்செப்ட் எனினும், நம் ஊருக்கு, சாமானிய ரசிகனுக்கும் ஏற்ற விஷயத்தை எந்த உறுத்தலும் இல்லாமல் புகுத்திவிட்டார் இயக்குனர். லாஜிக் அதிகம் யோசிக்காமல் பார்க்கும் பட்சத்தில், டீசண்ட் கமெர்ஷியல் படம் தான் இது.

ஆர்யா – டெடி கெமிஸ்ட்ரி சூப்பர், இமான் இசை பெரிய பிளஸ். க்ராபிக்ஸ் என பெரிதும் குழம்பாமல் டெடி காஸ்ட்யூம் போட்டு பட்ஜெட் செலவை பாதியாக  குறைத்துவிட்டனர் இந்த டீம்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – இது போன்ற சூப்பர் சினிமாவை தியேட்டரில் ரிலீஸ் செய்திருக்கலாம் ஸ்டூடியோ க்ரீன். திரை அரங்கில் பார்க்கும் பட்சத்தில் சூப்பர் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.

டிவியில் முழு திருப்த்தி கிட்டவில்லை என்பதே நிஜம். எனினும் குடும்பத்துடன் அமர்ந்து ஹாயாக பார்க்க ஏற்ற சூப்பர் கமெர்ஷியல் கலவை இப்படம். கட்டாயம் இரண்டாம் பார்ட் எடுங்க, தியேட்டரில் ரிலீஸ் செய்யுங்க என்பதே சினிமாபேட்டை டீம்மின் வேண்டுகோள்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3/5

Continue Reading
To Top