பிரேமம் போன்ற மலையாள சினிமாக்களை 200 நாட்களுக்கு மேல் தமிழ்நாட்டில் ஓடவைத்து பெருமைப்படுத்தும் அதேசமயம், ஹிட்டான மலையாள சினிமாக்கள் தமிழில் ரீமேக் ஆகும்போதெல்லாம் அந்தப்படத்தின் ஒரிஜினலை ரசித்த ரசிகர்களுக்கு உயிர்போய் உயிர்வருகிறது. சில படங்கள் தமிழுக்கு செட்டாகி ஹிட்டாகி விடுகின்றன தான். ஆனாலும் எல்லா படங்களுக்கும் அது பொருந்துமா என்ன..? சரி விஷயத்துக்கு வருவோம். தற்போது பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கான பெங்களூர் நாட்கள் படத்தில் துல்கர் கேரக்டரில் ஆர்யா நடித்துள்ளார் இல்லையா.?

அதிகம் படித்தவை:  சாயீஷாவின் துள்ளல் நடனத்தில் கஜினிகாந்த் பட 'ஹூலா ஹூலா' வீடியோ பாடல் !

படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கியுள்ளார். இவரும் ஒரு ரீமேக் கிங் தான். ஆனாலும் இந்தப்படத்தின் ரிசல்ட் எப்படி இருக்குமோ தெரியாது.. இப்போது இன்னொரு மலையாள ஹிட்டான ஒரு வடக்கன் செல்பி படத்தின் தமிழ் ரீமேக்கில் நிவின்பாலி கேரக்டரில் ஆர்யா நடிக்கிறாராம்.. ஆனால் படத்தின் இடைவேளைக்கு பின்னர் இன்னொரு நாயகனாக என்ட்ரி கொடுக்கும் வினீத் சீனிவாசன் கேரக்டரில் யார் நடிப்பது என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.

அதிகம் படித்தவை:  நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்! ஆர்யா மட்டும்தான் வேணும்.. ஷாக் அளித்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பிரஜித்தே தமிழிலும் இதை இயக்க இருப்பதுதான். அதுமட்டுமல்ல, படத்தின் ஸ்கிரிப்ட்டை மலையாளத்தில் எழுதிய வினீத் சீனிவாசனே தமிழுக்கும் ஏற்ற மாதிரி எழுத இருக்கிறாராம். தமிழில் தற்போது ஆர்யாவுக்கு இறங்குமுகம் என்பதால் இந்த ரீமேக் படங்களாவது அவரை மீண்டும் வெற்றிப்படிகளில் ஏற்றிவிடும் என நம்புவோம்.