Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆர்யாவை நம்பி கோடி கோடியாக பணம் செலவழிக்கும் சுந்தர் சி.. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் பாஸ்!

arya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆர்யாவை நம்பி கோடி கோடியாக பணம் செலவழிக்கும் சுந்தர் சி.. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் பாஸ்!

ஆர்யாவின் மார்க்கெட்டை நம்பி கோடி கோடியாக சுந்தர் சி பணம் செலவழிக்கிறார் என சோகத்தில் இருக்கிறதாம் கோலிவுட் வட்டாரம்.

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகராக இருப்பவர் ஆர்யா. அவ்வப்போது ஹிட் படங்களும் பல தோல்விப் படங்களையும் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் நடித்து வெளியான மகா முனி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக ஆர்யா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ராசிகண்ணா மற்றும் சாக்ஷி அகர்வால் நடித்து வருகின்றனர்.

தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்தி வரும் சுந்தர் சி ஒரு காட்சிக்காக சுமார் 2 கோடி வரையில் செட் போட உள்ளாராம்.

சுந்தர் சி யின் அரண்மனை, அரண்மனை 2 போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அரண்மனை3 திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

aranmanai-3-cinemapettai

aranmanai-3-cinemapettai

ஆனால் தியேட்டர்காரர்கள் தரப்பில் ஆர்யாவுக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் பெரிய விலை கொடுத்து வாங்க யோசிக்கிறார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top