Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாளை அஜித் பிறந்தநாள் ரசிகர்களுக்காக ஆர்யா கொடுக்கும் மாஸ் சர்ப்ரைஸ்.!
நாளை மே 1 உழவர் தினம் என்பதால் விடுமுறை நாளாகும் இதனால் பல தொலைகாட்ச்சிகளில் பல புது திரைப்படம் ஒளிபரப்பப்படும், மேலும் சினிமாவில் செல்லமாக தல என அழைக்க படும் அஜித்திற்கும் பிறந்தநாள், அதனால் அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட திட்டம் போட்டுள்ளார்கள்.
அஜித் சினிமாவில் இந்த உயரத்தை அடைய அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் இது அனைவருக்குமே தெரியும், இவரின் வெற்றிக்கு அயராது உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என பல பிரபலங்கள் கூறியுள்ளார்கள்.அஜித்திற்கு ரசிகர் மாற்றமே இல்லாமல் பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது, மேலும் பல சினிமா பிரபலங்களும் அஜித்தின் ரசிகர்கள் தான்.
அஜித் ரசிகர்களுக்கு விசுவாசம் படக்குழுவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் சோகத்தில் இருந்தார்கள், இப்படி சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி ஓன்று வெளியாகியுள்ளது. ஆம் நடிகர் ஆர்யா அஜித்தின் ரசிகர் என்று அனைவருக்கும் தெரியும், அஜித் பிறந்தநாளில் அவர் நடித்த கஜிநிகாந்த் படத்தின் ட்ரைலரை அஜித்தின் ரசிகர்களுக்காக வெளியிட இருக்கிறார் ஆர்யா, இதை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
