fbpx
Connect with us

ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் கதை இது தான் !

News / செய்திகள்

ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் கதை இது தான் !

கெளதம் கார்த்திக்கின் ‘ஹரஹர மஹாதேவகி’ இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் எடுக்கும் ரொமான்டிக் காமெடி படம் கஜினிகாந்த். ஆர்யா ஹீரோ. வனமகன் புகழ் சாயீஷா ஹீரோயின்.

ghajnikanth

முக்கிய வேடங்களில் சதீஷ், கருணாகரன், சம்பத் நடிக்கின்றனர். பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு மிக ஜரூராக நடைபெற்று வருகின்றது.

சூர்யாவின் கஜினி (ஷார்ட் டெர்ம் மெம்மரி லாஸ்) கூடவே தர்மத்தின் தலைவன் பாலு ரஜினிகாந்த் கெட்டப்பில் படத்தின் முதல் லுக் போஸ்டர் படத்தின் தலைப்போ கஜினிகாந்த்.  இதனை வைத்தே படத்தில் ஆர்யா ஞாபக மறதியால் அவதிப்படும் கதாபாத்திரம் என்று பொண்டு பொடுசு கூட சொல்லிவிடும்.

Gajni + Dharmathin Thalivan = Gajnikanth

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

bale bale magahdavoy

படத்தின் கதை

ஞாபக மறதி உடைய தாவரவியல் நிபுணன் நம் ஹீரோ. அதே துறையில்  உள்ள சீனியர் ஒருவரின் மகளை ஹீரோவுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பும் தந்தை. எனினும் ஹீரோவின் இந்த மறதி பிரச்சனையால்  திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாத சீனியர் என்று தெலுங்கு படத்தின்  கதை செல்லுமாம்.

arya – sayyesha

நம் ஹீரோ குச்சிப்புடி டான்சர் ஒருவரின் காதால் வலையில் வீழ்ந்துவிடுகிறார். தன் மரத்தை பிரச்சனையை மறைத்து காதலை ஓகே செய்கிறார் ஹீரோ. வழக்கம் போலவே அந்த சீனியரின் மகள் தான் ஹீரோயின். பின்னர் பிரேக்- அப். தன் நண்பர்களின் உதவி கொண்டு சில ஆள் மாறாட்ட வேலைகள் புரிந்து இறுதியில் ஹீரோயினுடன் ஜோடி சேர்வது தான் மீதி கதை.

karunakaran arya sathish

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தெலுங்கில் நானி – லாவண்யா திரிபாதி காம்போ அருமையாக அமைந்ததாலோ என்னவோ பழைய அரைத்த மாவு தான் என்றாலும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம் !

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top