Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் வயதான மலைவாழ் பெண்ணாக மாறிய ஆர்யாவின் காதலி அபர்ணதி.. வைரலாகும் புகைப்படம்!
கலர்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என கனவுடன் வலம் வந்தவர் தான் அபர்ணதி.
ஆர்யாவுக்கு பெண் தேடுவதற்காக கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட பெண்களை அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தி நல்ல டிஆர்பி பார்த்துக்கொண்டது கலர்ஸ் டிவி. கடைசியில் ஆர்யா அனைவருக்கும் கல்தா கொடுத்து விட்டார்.
பின்னர் ஆர்யா பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவுக்கு திருமணமான பிறகும் கட்டுனா ஆர்யாவை தான் கட்டுவேன் என ஒற்றை காலில் தற்போது வரை நின்று அடம் பிடித்து வருகிறார் அபர்ணதி.
அதற்கு இடையில் சினிமா பட வாய்ப்பு கிடைத்ததால் தன்னுடைய ரூட்டை மாற்றி விட்டாராம். ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் அபர்ணதி. அதனைத் தொடர்ந்து தேன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது. இதில் அச்சு அசல் மலைவாழ் பெண் போலவே மாறி விட்டாராம் அபர்ணதி. அந்த படத்தில் அபர்ணதி நடிக்கும் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

abarnathy-then-movie
அடுத்தடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தமிழ் சினிமாவில் அபர்ணதி கண்டிப்பாக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இடம் பிடிப்பார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
