Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆர்யா பொண்டாட்டி சரியில்லையாமே? திடீரென சாயிஷாவை கண்டபடி திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
ஆர்யா விளங்காத நட்பு காரணாமாக மாட்டிகொண்டு தவிக்கிறார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.
ஆர்யா, சாயிஷா ஆகிய இருவருக்கும் காதல் துளிர்விட காரணமாக இருந்த திரைப்படம்தான் கஜினிகாந்த். இந்த படத்தை இயக்கியவர் சந்தோஷ் ஜெயகுமார்.

sayeesha-cinemapettai
இதே சந்தோஷ் ஜெயக்குமார் தான் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கியவர்.
சந்தோஷுக்கும் ஆர்யாவுக்கும் இடையில் ஒரு நட்பு இருந்து வருகிறது. அந்த நட்புக்காக சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் குத்து என்ற படத்தின் டீசரை வெளியிட்டார்.
அந்த டீசரை பார்த்து காறித் துப்பாதவர்களே கிடையாது. அந்த அளவுக்கு ஆபாசங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள், ஆர்யாவின் மனைவி சாயிசா சரியில்லை என்றும், அவர் கண்டித்தால் ஆர்யா இதுபோன்ற செயல்களை செய்ய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.
நட்பு ரீதியில் உதவி செய்ய போன ஆர்யாவுக்கு ஏழரை வந்ததை நினைத்து அவரது குடும்பமே சோகத்தில் இருக்கிறதாம்.
