குழந்தை பெற்றபின் கழட்டி விட்டாச்சு.. 3வது காதல் திருமணத்திற்கு தயாரான ஆர்யா பட நடிகை

கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய், தனுஷ், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் அடித்து பட்டையை கிளப்பிய எமிஜாக்சன், தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தில் ரோபோவாக தன்னுடைய நடிப்பை கச்சிதமாக வெளிக்காட்டி இருப்பார். இருப்பினும் எமி ஜாக்சனுக்கு இந்த படத்திற்கு பிறகு, தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறையவே நடிப்பை விட்டுவிட்டு லண்டன் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

லண்டனைச் சேர்ந்த இவர் முதலில் பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பரை காதலித்தார். அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் இருந்த இவர், ஒரு ஆண்டுகள் கழித்து அவரை பிரிந்தார். அடுத்து இரண்டாவது தொழிலதிபர் ஜார்ஜை காதலித்தார்.

அவருடன் சேர்ந்து கல்யாணத்துக்கு முன்பே 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது.

சமீபத்தில் இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட்விக் காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவரும் தற்போது ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. எனவே இவர்கள் இருவரும் காதலர்கள் தான் என ஊடகங்களும் உறுதிப்படுத்தியது.

மேலும் இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஒன்றாக இருப்பதாக சில பாலிவுட் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிறது. எனவே கூடிய விரைவில் எமி ஜாக்சன் அவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

Next Story

- Advertisement -