சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் வெளிவருமா.? பா.ரஞ்சித் கூறிய அதிரடியான பதில்!

சமீபத்தில் வெளியான படங்களில் பெருமளவு மக்களிடையே வரவேற்பை பெற்றது சார்பட்டா பரம்பரை திரைப்படம். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ,பசுபதி, துஷாரா, ஜான் கொக்கன் ,சபீர், ஜான் விஜய் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் 1970களில் வடசென்னையில் இருந்த குத்துச்சண்டை பற்றியும் அங்குள்ள அரசியல், கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கிறது. மேலும் இந்த குத்து சண்டை போட்டியில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என்று இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி பிரபலமாக பேசப்படுகிறது.

இத்திரைப்படத்தில் அனைத்து காட்சிகளும் தத்ரூபமாக இடம்பெற்றிருக்கிறது. நடிகர்கள் அனைவரும் தங்களுக்குரிய கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி இருப்பது ரசிகர்களுக்கு சுவாரசியத்தை தந்துள்ளது.

sarpatta

இத்திரைப்படம் ரசிகர்களின் பாராட்டு மட்டுமின்றி திரையுலகினர் பாராட்டையும் வெகுவாக பெற்றிருக்கிறது. அதேபோல் ஒரு சில சர்ச்சைகளையும் சமாளித்து வருகிறது. இந்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் திமுகவிற்கு சாதகமாக இருப்பது போல அமைந்திருக்கிறது.

இருப்பினும் சார்பட்டா பரம்பரை ரசிகர்களின் மனதில் பட்டா போட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில் சார்பட்டா பரம்பரையில் பல காட்சிகளை சேர்க்க முடியவில்லை. அந்த விஷயங்களை முன்வைத்து 1925-ல் இருந்து கதை ஆரம்பிப்பது போல எடுக்க படம் எடுப்பதற்கு யோசித்து வைத்துள்ளதாக கூறி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமான செய்தியாக இருக்கிறது.