கடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆனாலும், தனி ஒருவன் தான் இந்த ரோஜா ஹீரோவை திரும்பி பார்க்க வைத்தது.

அர்விந்த் சாமி டிவிட்டரில் கொஞ்சம் ஆக்டிவ். தமிழக அரசியல் நிலைகளை உடனுக்குடன் ட்வீட் செய்து கமெண்ட் போடுகிறார். அது மக்களை தூண்டுவது போல் இருக்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தாலும், தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவதில் அவர் தயக்கம் காட்டவில்லை.

அரசியல் ட்வீட்டுகளால் நிறைந்து கிடக்கிறது அர்விந்த் ஸ்வாமியின் ட்வீட்டர் பக்கங்கள்.

எல்லாமே ட்வீட் பண்றியே, இதுக்கு பதிலை சொல்லு பாப்போம் என்பது போல, ‘உன் பொண்டாட்டி எங்க? உங்கப்பன் உண்மையான பெயர் என்ன? என்று கேள்வி கேட்டார்.

வேறு யாராவது இருந்தால் டென்ஷன் ஆகி இருப்பார்கள். இவர் பயங்கர கூல். ‘என் பொண்டாட்டி அவ புருஷன்கூட இருக்கா. எங்கப்பா உயிரோட இருந்தா கேட்டு சொல்லி இருப்பேன்.நாட்டுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்”ன்னு பதில் போட்டு உள்ளார்.

https://twitter.com/muralinpt/status/833711081742692353