போகன் பட ப்ரோமோஷனில் முட்டிக்கொள்ளும் ஹீரோவும் வில்லத்தனமான ஹீரோவும் என்று ஏற்கனவே நாம் விலாவரியாக ஒரு செய்தி போட்டு இருந்தோம்.

பேஸ் ஆப் பட தமிழ் ரீமேக் என்று சொல்லப்படும் ‘போகன்’ படத்தின் கதையை ரவியிடம் சொன்னபோதே, அந்த வில்லன் கேரக்டருக்கு அர்விந்த்சாமியை கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது தான் , தனி ஒருவன் வெற்றி பெற்று இருக்கிறது. மீண்டும் அரவிந்த்சாமியும் ஜெயம் ரவியும் இணைந்தால் சரியாக இருக்குமா? ன்னு சந்தேகப்பட்ட இந்த படத்தின் இயக்குனர் லக்ஷ்மணனிடம்,’எங்க காம்பினேஷனில் தமிழக மக்கள் நிறைய எதிர்பார்க்கறாங்கன்னு’ கன்வின்ஸ் பண்ணியது ரவியாம்.

படம் ஆரம்பித்தபின் , ஹீரோவுக்கு சும்மா சீன் கொடுக்கணும்ன்னு அரவிந்த்சாமி, இயக்குநரோட அப்பப்போ ஸ்பாட்டிலேயே முட்டலாம்.

அங்கெல்லாம் சமாளித்த இயக்கம், ‘வாடி ப்ரோமோஷனில் பார்த்துகிறேன்னு’ வெய்ட் பண்ணி செஞ்சிட்டாம். அதனால், அரவிந்த்சாமிக்கு போஸ்டரில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லயாம்.

‘ நீ என்னய்யா எனக்கு போஸ்டர்ல இடம் தர்றது ? எனக்கு நானே போஸ்டர் அடிச்சிக்கிறேன்னு’ அவரே இருக்கிற மாதிரி போஸ்டர்கள் அடிச்சிக்கிட்டாராம் சாமி. அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட, ஜெயம் ரவியை காணுமேன்னு பொதுஜனம் யோசிக்கிதாம்.

இந்த சூழலில், தியேட்டருக்கு ப்ரோமோஷனுக்காக ஜெயம் ரவி தனியாகவும், அரவிந்த்சாமி தனியாகவும் வந்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள இந்த முக்கியத்துவம் பிரச்சனையை முடிக்க இரு தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.