‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ‘சதுரங்க வேட்டை 2’ படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2017ஆம் ஆண்டில் ஹாலிவுட் படம் ஒன்றில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள்து. பல ஆஸ்கார் விருதுகளை வென்று குவித்த ‘Mad Max Fury’ படக்குழுவினர்களின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அரவிந்தசாமியும் ஹாலிவுட் பக்கம் செல்லவுள்ளது கோலிவுட் திரையுலகினர்களுக்கு மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.