தனி ஒருவன் வெற்றி பெற்றபிறகு, நடிகர் அரவிந்த்சாமிக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.தனி ஒருவன் வெற்றி பெற்றபிறகு, நடிகர் அரவிந்த்சாமிக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது தனி ஒருவன் தெலுங்கு ரீமேக், போகன் ஆகிய படங்களில் நடித்து வரும் அவரை, அடுத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அணுகியுள்ளனர். அதில் நடிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதலில் இந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பில், சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்சனை காரணமாக படம் தள்ளி போனது.

அதனால், சதுரங்கவேட்டை முதல் பகுதியை தயாரித்த மனோபாலாவே இரண்டாவது பகுதியையும் தயாரிக்கவுள்ளார்.