arvind-swamy-jayam-ravi-boganமிருதன் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் படம் போகன். தனி ஒருவனுக்கு பிறகு இதிலும் ஜெயம்ரவியும், அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கிறார்க்ள. ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். ஹன்சிகா ஜெயம்ரவி ஜோடியாக நடிக்கிறார். பிரபுதேவா புரொடக்ஷன் தயாரிக்கிறது.

ரங்கா என்ற படத்தில் முதலில் ரஜினி நல்லவராக இருப்பார், கராத்தே மணி திருடனாக இருப்பார். இருவரும் ஒரு நாள் இரவில் சந்திப்பார்கள். ரஜினி திருடக்கூடாது தப்பு என்ற மணிக்கு அறவுரை சொல்வார். மணியோ திருடினால்தான் ஜாலியாக வாழ முடியும் என்பார். மறுநாள் காலையில் மணியின் பேச்சை கேட்டு ரஜினி திருட ஆரம்பிப்பார், ரஜினி பேச்சை கேட்டு மணி நல்லவராகிவிடுவார்.

இந்த சாயலில்தான் போகன் உருவாகி வருவதாக கூறுகிறார்கள். அதாவது முன் பகுதியில் ஜெயம்ரவி வில்லனாகவும், அரவிந்த்சாமி ஹீரோவாகவும் இருப்பார்கள். பின் பகுதியில் அரவிந்த்சாமி வில்லனாகவும், ஜெயம்ரவி ஹீரோவாகவும் மாறுவார்கள். ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்றது போன்ற டமாலு டுமீலு மாதிரி பாடல் ஒன்றும் இதில் இடம்பெறுகிறது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.