Connect with us
Cinemapettai

Cinemapettai

aravind-swamy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரவிந்த்சாமிக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வேற லெவல் மாஸ் காட்டும் அடுத்தடுத்த படங்கள்!

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தளபதி படத்தில் கலெக்டர் கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதற்குப் பின்னர் ரோஜா, பாம்பே, மின்சாரக்கனவு, தனி ஒருவன், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களின் மூலம் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இன்னும் சுவாரசியமான தகவல் ‘த லயன் கிங்’ என்ற படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமாகியுள்ளார்.

அரவிந்த்சாமி இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களில் கமிட் ஆகியுள்ளாராம். அதில் நான்கு படங்கள் முடிந்துவிட்டதாகவும், இரண்டு படங்களில் நடித்தும் வருகிறார்.

கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசுரன் போன்ற படங்கள் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது. புலனாய்வு, தலைவி போன்ற படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் தலைவி படம் மட்டும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மூன்று மொழிகளில் வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது. கடந்த வருடம் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனாலும் செக்க சிவந்த வானம் படத்திற்குப் பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இவரது படங்கள் கூட OTT தளத்தில் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Continue Reading
To Top