போகன் படத்தில் அரவிந்த் சாமிக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?
போகன் படத்தில் தனிஒருவன் பட வெற்றி கூட்டணி ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இணைவதால் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.அண்மையில் கூட இருவரும் காக்கி சட்டை அணிந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்தது.
இதனால் படத்தில் இருவரும் போலீஸாக நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.ஆனால் உண்மையில் ஜெயம் ரவி மட்டும் தான் போலீஸாக நடிக்கிறாராம். முதல் பாதி ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட, இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி அட்டகாசங்கள் இருக்குமாம். ராஜ வம்சத்து கடைசி வாரிசாக இப்படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறாராம்.
Like Father Like Son என்ற படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் இந்த படம் என்கிறார்கள்.
