அரவிந்த் சாமி 1990களில் பெண்களின் கனவு காதலன். இவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது, பின்னர்  முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது.  அதன் பின் மனிதர் பல சூப்பர் ஹிட் படங்கள் நடித்தார். ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

aravind samy

2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு விட்டு  பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

அதன் பின் 2012ல் மீண்டும் மணிரத்தினத்தின் கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தனி ஒருவன், போகன் என்று மனிதர் வில்லன் வேடத்தில் கலக்கினார்.

தற்பொழுது சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வணங்காமுடி  என ஹீரோவாக நடிக்கத் துவங்கவிட்டார்.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால்,பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் , ரமேஷ் கண்ணா போன்றோர் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த “பாஸ்கர் தி ராஸ்கல்” என்ற திரைப்படத்ன்  ரீமேக்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ட்ரைலர்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ‘‘அர்விந்த் சாமி மாதிரியான ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. இந்த படத்தில் நடிப்பதற்கு  அர்விந்த் சாமி பேசிய தொகையில் ஒரு சிறிய பங்கை மட்டுமே  வாங்கிவிட்டு நடித்துக் கொடுத்துள்ளார்.மீதி பணத்தை பட ரிலீஸின் பொழுது பெற்றுக்கொள்வதாக சம்மதம் தந்தார்.  பட ரிலீஸ் சமயத்தில் மொத்தமாக ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுப்பதால் வட்டி பிரச்சனைகளிலிருந்து தயாரிப்பாளர்கள் நாங்கள்  மீள முடியும். அர்விந்த் சாமியின் மீது ஏற்பட்டுள்ள மரியாதையால் ஹர்ஷினி மூவிஸ் முருகன் அவரை வைத்து மீண்டுமொரு படமெடுக்க இருக்கிறார். அனேகமாக அந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று நினைக்கிறன்.” என்றார்.