Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருவி ஹிந்தி ரீமேக்கில் ஹீரோயின் யார் தெரியுமா? அட செட் ஆகுமா?

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அருவி, இந்த திரைப்படத்தில் நாயகியாக அதிதி பாலன் நடித்திருந்தார், இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அருவி படம் இந்தியிலும் ரீமேக் ஆவது பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தங்கல் படத்தின் வாயிலாக பிரபலமான பாத்திமா சனா ஷேக் இப்படத்தில் அதிதி ரோலில் நடிக்கிறார். இ.நிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். அஃபிளாஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பாய்த் பிலிம்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

aruvi remake

எனினும் குத்துசண்டை வீராங்கனையாக பார்த்த இவரை இந்த ரோலில் ரசிப்பார்களா என்ற பேச்சும் பாலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. எனினும் அந்த கத்பாத்திரத்தை உள்வாங்கி தான் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளதாக பாத்திமா தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாம்.

Continue Reading
To Top