ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின்  படைப்பு தான் அருவி.கடந்த வருடத்தில் இருந்து  பல பிலிம் பெஸ்டிவல்கள், விருதுகள் என்று கலக்கிய படம்.

ARUVI Aditi Balan

இந்நிறுவனத்தின் உருமையாளரில் ஒருவர் தான் எஸ். ஆர். பிரபு. இவர் ட்ரீம் வாரியர்ஸ் மட்டும் அல்லது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்பதையும் நடத்தி வருகிறார். இந்த வருடம் இவர் தயாரிப்பில் வெளியான மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி என்று மூன்று படமுமே சூப்பர் ஹிட். தமிழகத்தில் இவர் பாணர் படம் என்றாலே நமபி திரை அரங்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Rajnikanth SR Prabhu

எஸ். ஆர் . பிரபு தன் ட்விட்டரில் தற்பொழுது தேசிய விருது பற்றிய விஷயத்தை ஸ்டேட்டஸ் ஆக போட்டுள்ளார்.

” நானும் உங்களில் பலரை போல, அருவி தேசிய விருது கண்டிப்பாக  வாங்கும்  என்று தான் நினைத்தேன்.  சென்ற வருடமே நாங்கள் படத்தை பரிசீலனை குழுவுக்கு அனுப்பி வைத்த்தோம், ஆனால் ஜோக்கர் படத்துக்கு மட்டும் தான் கிடைத்தது. தற்பொழுது வரை எனக்கும் புரியவில்லை, ஏன் ஒரு பிரிவில் கூட இப்படம் விருது வாங்கவில்லை என்று ? ஆனால் படம் சூப்பர் ஹிட். ரசிகர்களுக்கு நன்றி. இந்த வெற்றி படக்குழுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.” என்றார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

சினிமாவை பொறுத்தவரை எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தான்.