fbpx
Connect with us

அருவி !! திரை விமர்சனம்.

Reviews / விமர்சனங்கள்

அருவி !! திரை விமர்சனம்.

அருவி

அருவி சில நாட்களாகவே அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டிய படம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு. பல பிலிம் பெஸ்டிவல்கள், விருதுகள் என்று கலக்கிய படம். தற்பொழுது தான் ரசிகர்களுக்காக திரை அரங்கில் ரிலீஸாகியுள்ளது.

aruvi

பல படங்களை விமர்சனம் செய்வது என்பது மிக சுலபம், நாலு வரிகளில் கதையை சொல்லிவிட்டு, இந்த பகுதி அருமை, இதெல்லாம் சொதப்பல் என்று சொல்லிவிட்டு போயிட்டே இருக்கலாம். ஆனால் மிக அரிதான சில படங்கள் நம்மை யோசிக்க வைக்கும். இந்த விஷயத்தை சொல்லிடலாமா இல்ல வேணாமா ? ட்விஸ்ட் சொல்லி தெரிவதை விட ஒரு  நபர் திரையில் பார்த்து தெரிந்துகொள்வது நன்றாக இருக்குமே என்று தோன்றும். அந்த வகை படம் தான் இந்த அருவி.

கதை

மிடில் கிளாஸ் குடும்பத்தில் செல்ல மகளாக பிறக்கும் ஒரு பெண். கொள்ளை அழகு, படு சுட்டி, படிப்பிலும் சிறந்தவள். குழந்தை வாடை பிடிக்கவில்லை என்று சொல்லும்  காரணத்தால் சிகரெட் பிடிப்பதை விடும் தந்தை. இரவு 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாடும் தமபி, பாசமாக இருக்கும் தாய், தன்னுடைய தோழிகள் என்று நாம் அன்றாடம் ரோட்டில் பார்க்கும் கதாபாத்திரம் தான் இந்த அருவி.

தீடீரென்று குடும்பமே அவளை வெறுக்கும் சூழல். அறிந்து ஏதும் தவறு செய்யமால், சூழ்நிலையால் பாதிக்கப்படும் பெண். அவள் சந்திக்கும் நபர்கள், எதிர் கொல்லும் துயரங்கள், சவால்கள் என்று மிக அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் அதே சமயம் நம்பகத்தன்மையும் கெடாமல் படத்தை இயக்கியுள்ளார் புதுமுக இயக்குனர் அருண் பிரபு.

aruvi

நல்ல திரைக்கதை, நெத்தியடி வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, அசத்தலான பின்னணி இசை. இவர்கள் நடிகர்களா, அல்லது நிஜ மனிதர்களை நடமாட விட்டுவிட்டார்களா என்று யோசிக்கும் அளவிற்கு வந்துள்ளது படம். மீடியா எப்படி விஷயத்தை பூதகரமாக்குகிறது என்பதை துகிலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர். சமுதாயம், உலகமயமாக்கல், மீடியா, டெக்னாலஜி, ஜெனெரேஷன் காப், என்று தெள்ளத்தெளிவாக படத்தில் காட்டியதற்கு இந்த குழுவிற்கு ஸ்பெஷல் பாராட்டு.

பிளஸ், மைனஸ்

படத்தை பொறுத்தவரை அனைத்துமே பிளஸ் தான். மைனஸ் என்பது எந்த இடத்திலும் கிடையாது.

aruvi

சினிமாபேட்டை ரேட்டிங்

சில படங்களுக்கு மார்க் தருவதை விட, அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது என்று தோன்றும். விசாரணை,  குக்கூ, ஜோக்கர், அறம் அந்த வரிசையில் இந்த அருவி.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

இயக்குனர் ராமின் கற்றது தமிழ் ஒரு ஆணின் பார்வையில் இந்த சமுதாயம் எப்படி உள்ளது என்று காட்டியது. அதே போல் ஒரு பெண்ணின் பார்வையில்  சமுதாயம் என்பது இது தான் என்று சொல்லும் படம் தான் இந்த அருவி.

அருவி கட்டாயம் “பார்க்க வேண்டிய படம்” என்று சொல்வதை விட, கட்டாயமாக அனைவரும் “படிக்க வேண்டிய பாடம்”.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Reviews / விமர்சனங்கள்

Advertisement

Trending

To Top