இப்ப இருக்குற சோசியல் மீடியாவை வைத்து சிறு சிறு நடிகர்கள் எல்லாம் உச்சத்திற்கு செல்ல, நடிகர் அருண் விஜய் மட்டும் ஆரம்பத்தில் போராடிய போராட்டம் கொஞ்ச நஞ்சமல, போராடி போராடி தோல்வி மட்டுமே அவரை தொடர்ந்தது. அதன்பின் யாரின் நல்ல பார்வை பட்டதோ தெரியவில்லை அஜித்தின் என்னை அறிந்தாலில் கிடைத்த வெற்றியை சரியாக கையாண்டார். அவரின் நடிப்பு முழுக்க பேசப்பட்டது. அதிலும் அஜித்திற்கு சரியான போட்டியாக இருந்தார் அந்த வாய்ப்பையும் கவுதம் வாசுதேவ் மேனன் வழங்கினார்.

அதெல்லாம் சரி, வாய்ப்பு குடுத்தார் இவரும் நடித்து பெயர் பெற்றார். அதுக்காக இவரை இப்படி நோகடிப்பது சரியா என்று கவுதம் மேனன் யோசிக்க வேண்டும். என்னை அறிந்தால் முடிந்து, குற்றம் 23 படத்தில் நல்ல பெயரை மேலும் பெற்றார் அருண் விஜய். எல்லாம் நல்லா வந்துகொண்டிருந்த நேரத்தில் அருண் விஜயின் வெற்றி பார்த்து கவுதம் மேனன் அவரை வைத்து படமெடுக்க வந்தார். ஒரு நல்ல தயாரிப்பாளரும் சிக்கினார். பரபரப்பா படபிடிப்பு சென்று கொண்டிருந்த நேரத்தில் கவுதம் மேனன் அவர் வேலையை காமிக்க ஆரம்பித்தார். நான்கு நாள் மட்டுமே படபிடிப்பு நடந்தது. தயாரிப்பாளரும் சில கோடிகளை கொட்டியுள்ளார் கவுதம் மேனன்னிடம், அவரும் அனைத்து பணத்தையும் அவரின் சிறு சிறு படங்களுக்கு வழங்கிவிட்டு இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.

இதனால் திரும்ப என்னை சினிமாவில் முதலிலிருந்து ஆரம்பிக்க வைத்துவிடுவார் என பயந்து கொண்டுருக்கிறார் அருண் விஜய். தயாரிப்பாளரும் பாதி பணத்தை போட்டுவிட்டு கவுதம் மேனன் பின்னாடியே சென்று கொண்டுருகிறார். நம்ம மேனன் அதை கண்டுகொள்ளவே இல்லையாம். உண்மைலேயே கவுதம் மேனன் நினைத்தால் அந்த காலத்தின் டைரக்டர் ஸ்ரீதர் போல எப்பேர்பட்ட படத்தையும் உடனே முடித்து விடுவார். பச்சக்கிளி முத்துசரம் படம்லாம் அதற்கு பெரிய உதாரணம். பாவம் அருண்விஜய் கொஞ்சம் பார்த்து செய்யுங்க கவுதம் மேனன் .