Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகர் பற்றி அடிக்கடி விசாரிக்கும் அஜித்.. காரணம் என்னவா இருக்கும்

அருண் விஜய் அஜித்தை பற்றி பேசியது
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடித்த பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி தரவில்லை. அதனால் சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தன. ஆனால் தெளிவாக தேர்வு செய்து குற்றம் 23 போன்ற படங்களில் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார்.
தற்போது ஒரு புதிய படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். அதற்கான புரமோஷன் வேலைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஒரு தொகுப்பாளருக்கு பேட்டியளித்த விஜய்யிடம் அஜித்தை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் நேரில் சந்திக்கவில்லை, ஆனால் என்னை பற்றி அஜித் அவர் மேனேஜரிடம் என்ன செய்கிறார் என விசாரித்து வருவதாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
