சந்தன கடத்தல் வீரப்பன் போல் கிடா மீசையுடன் வலம் வரும் அருண் விஜய்.. கலக்கும் ஹரி படத்தின் லுக்

arunvijay-veerappan
arunvijay-veerappan

இயக்குனர் ஹரி சமீபகாலமாக ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க தடுமாறி கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக வெறும் போலீஸ் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தி ரசிகர்களையே சலிப்படைய வைத்து விட்டார் போல.

இதனால் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான சூர்யாவின் சிங்கம் 3 படமும், விக்ரமின் சாமி 2 படம் படுதோல்வியை சந்தித்தன. அதிலும் சாமி 2 படத்தின் வசனங்கள் அனைத்துமே படு மட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களினால் ஹரியின் மார்க்கெட் வெகுவாக குறைந்து விட்டதாம். இந்நிலையில் மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி போட்ட அருவா படம் கூட பேச்சுவார்த்தையின் போதே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருவா படத்தின் கதையை வைத்து தான் தன்னுடைய மச்சான் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம் ஹரி. இது அருண் விஜய்யின் 33 வது படமாகும். வேல் படத்தைப்போலவே குடும்ப கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாம்.

மேலும் ஸ்டைலிஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அருண் விஜய்க்கு ஹரியின் இந்த திரைப்படம் ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். மேலும் இந்த படத்திற்கு 12 வருடத்திற்கு பிறகு ஹரியுடன் கூட்டணி அமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

மேலும் மாபியா படத்திற்கு பிறகு அருண் விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி போட உள்ளார் பிரியா பவானி சங்கர். ஹரி படத்திற்காக அருண் விஜய் சந்தன கடத்தல் வீரப்பன் போலகிடா மீசையுடன் வலம் வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

arunvijay-hari-movie-getup
arunvijay-hari-movie-getup
Advertisement Amazon Prime Banner