Connect with us
Cinemapettai

Cinemapettai

arunvijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண்விஜய் படத்திற்கு முதன் முதலாக இசையமைக்கும் மாஸ் இசையமைப்பாளர்.. இரட்டிப்பு எதிர்பார்ப்பில் AV33

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து தற்போது தான் தொடர் வெற்றிகளைக் சுவைத்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். அதற்கு முக்கிய காரணம் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் தான்.

அருண்விஜய்க்கு தன் வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்தது என்னை அறிந்தால். அதை அவரை பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகுதான் அருண்விஜய் வாழ்க்கையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன.

ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அருண்விஜய். ஸ்டைலிஷ் ஹீரோவாக வலம் வந்த அருண்விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கமர்ஷியல் கதையை கையில் எடுத்துள்ளார். இந்த முறை தன்னுடைய மாமா இயக்குனர் ஹரியுடன் இணைந்து AV33 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் மாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே அருண்விஜய் மலை மலை, மாஞ்சா வேலு போன்ற படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அந்த சமயத்தில் அருண்விஜய்க்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண் விஜய் படங்களுக்கு பெரிய அளவு ஓபனிங் இருப்பதால் இதுதான் மாஸ் ஹீரோவாக மாறுவதற்கு சரியான நேரம் என ஹரியுடன் இணைந்து மாஸ் குடும்ப கமர்ஷியல் திரைப்படமொன்றில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்திற்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு ஹரி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். அதேசமயம் அருண் விஜய்க்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

gvprakash-av33-cinemapettai

gvprakash-av33-cinemapettai

Continue Reading
To Top