புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சத்தமே இல்லாமல் அருண் விஜய் செய்த காரியம்.. பம்பரமாய் சுற்றி வரும் விவாகரத்து இயக்குனர்

சமீபத்தில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் யானை படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்று வருகிறது. அருண்விஜய் எதிர்பார்த்தது போல் இந்த படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதனால் அருண் விஜய் தற்போது தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். மேலும் தற்போது அருண் விஜய் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். யானை படத்திற்குப் பிறகுதான் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் அருண் விஜய் இருந்தார்.

இதனால் அருண்விஜயின் படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளது. இது தவிர தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரிலும் அருண்விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. இத்தொடரை சோனி லைவ்வில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் அருண் விஜய் எந்த ரோலாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று அது போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் படத்தில் அருண் விஜய் கமிட்டாகியிருக்கிறார்.

மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவி போன்ற படங்களை இயக்கிய ஏஎல் விஜய் படத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் வேலைகள் அனைத்தும் படு ஜோராக நடந்து வருகிறது. சத்தமே இல்லாமல் இப்படத்திற்கு ஒரு வாரம் சூட்டிங்கும் முடிந்துவிட்டதாம்.

இப்பொழுது பம்பரமாய் அந்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டனர் இருவரும். இப்படத்துக்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகயுள்ளது. அருண் விஜய்யின் தரமான கம்பேக் மூலம் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

Trending News