கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் ராஜா காமராஜ். இவர் இதற்கு முன்னதாக தெறி, கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களுக்கு பாடல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார், அதற்கு பல பாராட்டுகளையும் பெற்றார்.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ஒரு காமெடி நடிகனாக (Udumbe) அறிமுகமானார். இப்படி சினிமாவில் பல முகங்களைக் கொண்ட அருண்ராஜா காமராஜ் தளபதி விஜய்க்கு கதை கூறியதாக செய்திகள் வெளிவந்தது.
அந்த சம்பவம் என்னவாச்சு என்று பேட்டியில் கேட்டபோது தளபதியிடம் கதை கூறியதாகவும், அந்த கதை நடிப்பதற்கான சூழ்நிலை வரும்போது நான் கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டாராம். ஏன் என்றால் அது அரசியல் சம்மந்தப்பட்ட கதையாம். என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்களா என்றாராம் விஜய்.
மேலும் இதனால் தளபதிக்கு கதை கூறியது ஒரு பெரிய அனுபவமாகவும், இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் பல இயக்குனர்கள் தத்தளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை தளபதியை சந்திக்கும்போது ‘நண்பா எப்போது ஷூட்டிங் போகலாம்’ என்று தனது தோளில் கையை போட்டு கேட்பார் அந்த அளவிற்கு வேறு ஒரு கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவரை சந்திப்பதாகவும் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் இயக்குனராக வாய்ப்பு பெற்ற அருண்ராஜா காமராஜ்க்கு, தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்ததற்கு சினிமா பேட்டையின் வாழ்த்துக்கள்.