Connect with us
Cinemapettai

Cinemapettai

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்.. எதிர்பாராத நேரத்தில் இணையும் கூட்டணி

arun-raj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்.. எதிர்பாராத நேரத்தில் இணையும் கூட்டணி

கனா என்ற ஒற்றை படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பெருமைப்படுத்தியவர் அருண்ராஜா காமராஜ். இயக்குனர் மட்டுமின்றி காமெடியன் பாடலாசிரியர் என பல்வேறு முகங்களை கொண்டுள்ள அருண் காமராஜா தனது அடுத்த படத்தை முன்னணி நடிகரை வைத்து இயக்க உள்ள செய்தி தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் நண்பனான அருண்ராஜ் காமராஜா சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த கனா படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க பெண்கள் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் மையமாகக் கொண்டு சிறந்த திரைக்கதையாக அமைந்த இந்த படத்தை தமிழ் சினிமாவே தூக்கிவைத்துக் கொண்டாடியது.

இந்நிலையில் இவரின் அடுத்த பட அப்டேட் குறித்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அருண்ராஜ் காமராஜாவின் அடுத்த படத்தினை பற்றிய அப்டேட் தற்போது கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் சமீபத்தில் மேடை ஒன்றில் அருண்ராஜ் காமராஜா முன்னணி நடிகரை விரைவில் இயக்குவார் என அறிவித்திருந்தார்.

அந்தவகையில் நடிகர் கார்த்தியை வைத்து அருண் ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும், இந்த படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

தளபதியின் மாஸ்டர் படத்தில் சமீபத்தில் வெளியான குட்டிக் கதைப் பாடலின் பாடலாசிரியரும் அருண்ராஜ் காமராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top