வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அந்நியனாக மாறிய கண்ணம்மா வீட்டுக்கார்.. ஜாக்லினுக்கு நடந்த அவமானம், தட்டி கேட்பாரா விஜய் சேதுபதி.?

Vijay Sethupathi-Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே வந்துள்ளனர்.

இதுவும் அவர்களுக்குள் ஒரு பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. சீனியர் ஜூனியர் என ஆளுக்கு ஒரு பக்கம் போட்டியாளர்கள் முறைத்துக் கொண்டு செல்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மூன்று வாரங்களாக அம்பி மோடில் இருந்த அருண் இப்போது அந்நியனாக மாறி இருக்கிறார்.

கடந்த வார இறுதியில் இருந்து இவருடைய பேச்சு வித்தியாசமாக இருப்பதாக ஆடியன்ஸ் தெரிவித்து வருகின்றனர். இது வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் தெரியத்தான் செய்கிறது.

சில நேரங்களில் சாப்ட் ஆக இருக்கும் இவர் பல நேரங்களில் ரகட் பாயாக மாறிவிடுகிறார். அதிலும் நேற்றைய தினத்தில் ஜாக்லின் சாப்பிட வரும்போது முதலில் வருபவர்களுக்கு குடுங்க என அருண் ரஞ்சித்திடம் கூறினார்.

திடீர் அந்நியனாக மாறிய பிக்பாஸ் அருண்

அந்த சமயம் பார்த்து ஜாக்லின் ஒரு சப்பாத்தியை எடுக்க இந்த வார்த்தையை அவர் காதில் விழுந்து விட்டது. இதனால் எடுத்ததை அப்படியே தட்டில் வைத்துவிட்டு நான் கடைசியா சாப்பிடுகிறேன் என கிளம்பிவிட்டார்.

இதை பார்த்த பார்வையாளர்கள் கண்ணம்மா வீட்டுக்காரரை எப்போது ரோஸ்ட் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி நிச்சயம் இதை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு சில போட்டியாளர்களை மட்டும் தான் அவர் தேவையில்லாமல் வறுத்தெடுக்கிறார்.

ஆனால் அருண் சில நாட்களாக நடந்து கொள்வது தவறாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என சோசியல் மீடியாவில் பிக் பாஸ் பார்வையாளர்கள் பொங்கி வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் வீட்டுக்குள்ளும் பூதாகரமாக வெடித்தது. அதையடுத்து அருண் நான் அப்படி சொல்லல. சாப்பாடு விஷயத்துல நான் சொல்லவே மாட்டேன் என ஜாக்லின் கையைப் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

இதை நம்பாத பார்வையாளர்கள் நீ ஒரு நேரம் அமைதியாக இருக்க இன்னொரு நேரம் அந்நியனாக இருக்க என கலாய்த்து வருகின்றனர். இப்படியாக பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ஆடியன்ஸை கவர்ந்தவர்கள் இப்போது நெகட்டிவ் இமேஜை பெற தொடங்கியிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News