Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமான் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற தமிழனுக்கு மீண்டும் உலக அளவில் பெருமை.! எதற்காக தெரியுமா?
பிரபல வார இதழ்களில் ஒன்றான Fortune நாளிதழ் இந்த வருடத்திற்கான தலை சிறந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது.
அமெரிக்காவில் பிரபல வார இதழ்களில் ஒன்றான Fortune நாளிதழ் இந்த வருடத்திற்கான தலை சிறந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் மாற்றத்தையும் வித்தியாசத்தையும் கொண்டு வந்த அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் பெருமைப்படுத்தும் வகையில் இந்த வார இதழ் அவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது.
அதாவது இந்த ஆண்டுக்கான 50 தலைசிறந்த தலைவர்களின் பெயர்களில் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் 45 வது இடத்தை பிடித்துள்ளார். இது தமிழர்களுக்கு பெருமை என்று கூறலாம். கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
மேலும் இவரது வாழ்க்கையை மையப்படுத்தி அக்ஷய்குமார் ஹிந்தியில் பேட் மேன் எனும் தலைப்பில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அருணாச்சல முருகானந்தத்தின் மலிவு விலை நாப்கினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரியட் end of sentence எனும் குறும்படத்திற்காக ஆஸ்கர் விருது கிடைத்தது.
மேலும் இவரது கண்டுபிடிப்பை பாராட்டும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கௌரவப்படுத்தியது.
#1. arunachalam muruganantham

arunachalam muruganantham
