Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆஸ்கார் விருதை தட்டிச்செல்லும் தமிழர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வருடம் 2019 ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆஸ்கர் விருது வாங்கிய ஒரே நபர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற தமிழன் என்ற பெருமை பெற்றிருந்தார். தற்போது இவருக்கு அடுத்ததாக ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தமிழன் என்ற பெருமையை கோவையைச் சேர்ந்த அருணாசல முருகானந்தம் பெற்றார்.

Arunachalam Muruganantham
அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் பிரபல நடிகருமான Akshay kumar பேட்மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அவர் தன் வாழ்க்கையில் பட்ட கஸ்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அருணாச்சலம் முருகானந்தத்திற்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து இந்திய அரசு பெருமைபடுத்தியது.

Arunachalam Muruganantham
தற்போது அருணாச்சலம் முருகானந்தத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள பெண்கள் மாதவிடாய் பிரச்சனையை எப்படி சந்திக்கிறார்கள் என்பதை மையமாக கொண்ட ப்ரியடு டாட் எண்டு ஆப் செண்டன்ஸ் என்ற குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. கோவையை சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் என்பவர் மலிவுவிலையில் நேப்கின் தயாரிப்பதை கதையாக் கொண்ட குறும்படம்.
