Tamil Cinema News | சினிமா செய்திகள்
வியட்னாமில் முரட்டுத்தனமான பயிற்ச்சியில் பாக்ஸர் அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் பாக்ஸர் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது.
Published on
எக்ஸெக்ட்ரா என்டேர்டைன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவாளராக லண்டனை சேர்ந்த மார்கஸ் பணியாற்றுகிறார் எடிட்டராக மதன். இசை டி இமான். இப்படத்தில் ரித்திகா சிங், மீரா என் கிற ஸ்போர்ட்ஸ் ஜூர்னலிஸ்ட் வேடத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே அருண் விஜய் boxer படத்தில் நடிப்பதற்காக பாக்ஸிங், மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தார். ஏழாம் அறிவு பட வில்லனுடன் இணைந்து ப்ராக்டிஸ் எடுத்தார்.
இந்நிலையில் தன் ரசிகர்களுக்காக தனது ப்ராக்டிஸ் பற்றிய விடியோவை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.
