Connect with us

Cinemapettai

அருண் விஜய் vs அருண் விஜய் – தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் தடம். திரைவிமர்சனம்.

thadam

Reviews | விமர்சனங்கள்

அருண் விஜய் vs அருண் விஜய் – தரமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் தடம். திரைவிமர்சனம்.

தடம் – இயக்குனர் மகிழ்திருமேனி அருண் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம்.

ஆக்ஷன் திரில்லர் பட ஜானரில் தனெக்கென தனி முத்திரை (தடையரத்தாக்க, மீகாமன்) பதித்துவிட்டார் மகிழ்திருமேனி. இவர் உண்மை சம்பவங்களின் இன்ஸிபிரேஷன் எடுத்து உருவாகியுள்ள படம். சட்டத்தில் உள்ள ஓட்டையை எப்படி பயன்படுத்தலாம் என இப்படம் காட்டியுள்ளது. எனினும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தடம் இடம் பிடித்ததா என வாங்க நாம் பார்ப்போம்.

கதை

ஐஐடியில் படித்து கமபனி நடந்தும் அருண் விஜய் ஒருபுறம். சின்ன சிறிய 420 வேலைகள் மற்றும் கிளுப்பில் சீட் ஆடும் அருண் விஜய் மறுபுறம். நீலாங்கரையில் நடக்கிறது ஒரு கொலை. பின் வீட்டு ஆசாமி எடுத்த செல்பியில் அருண் விஜய் முகமும் இருக்கிறது.

thadam

thadam

சிவில் என்ஜினீயர் எழிலா அல்லது திருட்டு ஆசாமியாக இருந்தாலும் சட்டத்தில் அதிக அறிவு உள்ள கவினா, யார் குற்றவாளி என துப்பு தேட ஆரம்பிக்கிறது போலீஸ்.

இருவரும் ஆளவந்தான் கமல் போல ஒருவரை ஒருவர் அழிக்க துடிக்கும் இரட்டையர்கள், மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் என விறு விறுவென செல்கிறது கதை. இறுதியில் குற்றவாளியை சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும், யார் தான் இவர்களில் கொலை செய்தது, இன்னொருவனின் ரோல் தான் என்ன என முடிகிறது படம்.

பிளஸ்

கடைசி 20 நிமிட ட்விஸ்ட், அருண் விஜய்

மைனஸ்

படத்தின் ஓடும் நேரம், சுமாரான பின்னணி இசை

சினிமாபேட்டை அலசல்

பயணத்தின் பொழுது கையில் எடுக்கும் ராஜேஷ்குமார் நாவல் போல, பல கதாபாத்திரங்கள், கிளை கதை என நகர்கிறது படம். திரைக்கதையை அசத்தலாக அமைத்த இயக்குனருக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

thadam

thadam

எனினும் இரண்டு ஹீரோக்களுக்கும் ஜோடி மற்றும் முதல் பாதியில் சில தேவையற்ற காட்சிகளை நீக்கி, இரண்டு மணிநேரம் ஓடும் அளவில் முழுநேர த்ரில்லராகவே கொடுத்திருக்கலாம் இயக்குனர். (தமிழ் சினிமா ரசிகரக்ள், அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க இயக்குனரே.)

சினிமாபேட்டை வெர்டிக்ட்

சமுதாயத்துக்கு மெஸேஜ் சொல்றேன், கருத்துள்ள படம் என்றெல்லாம் இல்லாமல் பக்க கமெர்ஷியல் படத்தை கொடுத்துள்ளது இந்த டீம். அருண் விஜய்க்காகவே உருவாக்கப்பட்ட படம் என்றால் மிகையாகாது. சில இடங்களில் லாஜிக் மீறினாலும் கொடுத்த பணத்திற்கு முழு திருப்த்தி கொடுக்கும் படம் தான் இந்த தடம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top