Reviews | விமர்சனங்கள்
வேட்டையாடும் அருண் விஜய், விளையாடும் தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம்.. ஏவிஎம் ரீ-என்ட்ரி எப்படி இருக்கு?
ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தின் வெப் சீரிஸ் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் என முன்னணி பிரபலங்கள், ஈரம் புகழ் அறிவழகன் இயக்கத்தில் 8 அத்தியாயம் கொண்ட தொகுப்பே இந்த தமிழ் ராக்கர்ஸ்.
சினிமாவே பார்க்க பிடிக்காத போலீஸ் ருத்ராவாக அருண் விஜய். தனது மனைவியை இழந்த சோகத்தில் வேலை மற்றும் குடிப்பழக்கம் என செல்கிறது இவரது வாழ்க்கை. தீபாவளி ரிலீசுக்கு ரெடியாகும் முன்னணி ஹீரோ படத்தை நாங்கள் ஒரு நாள் முன்பே வெளியிடுவோம் என அறிவிக்கின்றனர் தமிழ் ராக்கர்ஸ்.
Also Read: தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!
இந்த கேசை அருண் விஜய் டீல் செய்கிறார். ஒருபுறம் அவரது காதல் பிளாஷ்பேக் மறுபுறம் இன்வெஸ்டிகேஷன். கூடவே தமிழ் ராக்கர்ஸ் செய்யும் வேலைகளும், அவர்களுக்கு உதவும் ஆட்கள் பற்றியும் காண்பிக்கிறார்கள்.
சினிமா துறையில் தயாரிப்பாளர், இயக்குனர் போன்றவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மாஸ் ஹீரோக்களின் பிராண்ட் வால்யூ, ரசிகர்களின் கண்ணோட்டம் என பல விஷயங்களை யதார்த்தமாக படமாக்கியுள்ளனர்.
சினிமாவில் வெற்றி கண்டவர்களை விட, சாதிக்க நினைத்து போராடுபவர்கள் அதிகம் என சொல்லியுள்ளனர் இந்த டீம். மேலும் எவ்வாறு நெட்வொர்க்காக வேலை செய்து படங்களை இணையத்தில் ஏத்துகிறார்கள் என நமக்கு எளிதில் புரியும் படி படமாக்கியுள்ளனர் .
Also Read: யார் கையிலும் சிக்காத தமிழ் ராக்கர்ஸ்.. அதிரடி விசாரணையில் அருண் விஜய்
சைபர் துறை ஸ்பெஷலிஸ்ட்டாக வாணி போஜன் இந்த தொடருக்கு பக்கபலம். இறுதியில் ஜெயித்தது அருண் விஜய்யா அல்லது தமிழ் ராக்கர்ஸா என்பதுடன் அடுத்த பார்ட்டுக்கான தொடக்கத்துடன் முடிகிறது இந்த சீசன்.
சினிமாபேட்டை அலசல்: வெப் சீரிஸுக்கு ஏற்ற அணைத்து விஷயங்களும் இதில் உள்ளது. நாம் எளிதில் யூகிக்க கூடிய ட்விஸ்டுகள் தான் அதிகம். சினிமாவில் ஏமாற்றம் அடைந்தவர்கள் உருவாக்கியதே தமிழ் ராக்கர்ஸ் என்ற வாதத்தை வைத்துள்ளனர் இந்த டீம். சினிமா திருட்டு என்பதோடு மட்டுமல்லாது டார்க் வெப், தீவிரவாதம் என அடு த்தடுத்த ஸ்டெப்புக்கு பீடிகை போட்டுள்ளனர் இந்த டீம். இன்றைய நெக்ஸ்ட் ஜென் இளசுகளை பெரிதளவில் ஈர்க்காது இந்த தொடர் என்பதே நிதர்சனம்.
Also Read: ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்
சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5/5
