தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய் - Cinemapettai
Connect with us

Cinemapettai

தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்

Arun Vijay_Kuttram23

தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23′. இப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தையும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இப்படத்தை அருண் விஜய்யை வைத்து `தடையறத்தாக்க’ என்ற ஆக்‌ஷன் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார்.

`என்னை அறிந்தால்’, `குற்றம் 23′ போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த அருண் விஜய், இப்படத்தில் புதிய பரிநாமத்தில் தோன்றவுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த `தடையறத்தாக்க’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top