Photos | புகைப்படங்கள்
‘தோட்டா போல என் வாழ்க்கை, விரைவில் …’ லைக்ஸ் குவிக்குது அருண் விஜய் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.

அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் இவரின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து வைத்தார். இப்பொழுது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட பிற மொழிகளிலும் சேர்த்து அதிக படத்தில் வில்லனாக தான் நடித்து வருகிறார் .
அருண் விஜய் ஜிம் பிரியர் எனபது நாம் அறிந்ததே . 6 பேக் போட்டோ, ட்ரைனிங் வீடியோ என்று வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் பலரும் இவரை நம்ப ஊரு ஜாக்கி ஜான், டோனி ஜா என்று கூட சொல்லி வருகின்றனர்.
இந்த வருடம் விரைவில் தமிழில் தடம், தெலுங்கில் சாஹோ ரிலீசாகும். மேலும் மனிதர் மூடர் கூடம் நவீனின் “அக்னி சிறகுகள்”, மற்றும் பாக்ஸர் படங்களில் படத்திலும் நடித்து வருகிறார்.

Arun Vijay
இந்நிலையில் இன்று இவர் புதிய போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். ” என் வாழ்க்கை இன்னமும் டார்கெட்டை அடிக்காத வேகமான தோட்டா போல். உங்களின் ஆசி மற்றும் வாழ்த்துக்களுடன் விரைவில் டார்கெட்டை அடைவேன்” என்பதே அது.
My life is like a speeding bullet that hasn’t hit the target yet!! With all ur wishes and blessings… WILL HIT IT SOON..!??? pic.twitter.com/hVEgM7SHew
— ArunVijay (@arunvijayno1) January 12, 2019
இவர் ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் என இதில் அசத்தலாக உள்ளார் மனிதர்.
