அருண் விஜய்

சினிமாவிற்கு தேவையான அணைத்து விதைகளையும் முறையாக கற்றவர். எனினும் அவ்வப்பொழுது ஒரு ஹிட் கொடுப்பார். பின்னர் மனிதர் இருக்கும் இடமே தெரியாது. இவர் நடிப்பில் துள்ளி திரிந்த காலம், பாண்டவர் பூமி, இயற்கை, ஜனனம், தடையற தாக்க, குற்றம் 23 போன்றவை சூப்பர் ஹிட்.

arunvijay
Arun Vijay

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் `தடம்’ படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இதுமட்டுமன்றி பாகுபலி பிரபாஸுடன் சாஹா படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இறுதி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் மணி ரத்தினம் அவர்களின் செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. பாஹாத் பாசில் விலகியதால் இவருக்கு அந்த வாய்ப்பு வந்தது. இந்நிலையில் செக்க சிவந்த வானம் தன் சினிமா வாழ்க்கையில் 25 வது படம் என்பதை அருண் விஜய் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

மேலும் என்னுடைய 25 வது படத்தை மிக பிரம்மாண்ட கூட்டணியுடன் நான் அறிவிக்க இருந்த நேரத்தில் மணிரத்தினம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளிவரும். அது உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளார் அருண் விஜய்.