Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யானை பலத்துடன் திரையரங்கை தெறிக்கவிட்ட அருண் விஜய்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள யானை திரைப்படம் ஒரு வழியாக இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. பல தடைகளை கடந்து இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

yaanai-review-arun-vijay-1

yaanai-review-arun-vijay-1

அந்த வகையில் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். வழக்கமாக ஹரியின் திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருப்பார்கள். அதே போன்று இந்த படத்திலும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

yaanai

yaanai

மேலும் படத்தின் முதல் பாதி பயங்கர விறுவிறுப்புடன் நகர்வதாகவும், ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தி இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

yaanai

yaanai

அதுமட்டுமில்லாமல் கிராமத்தானாக நடித்திருக்கும் அருண் விஜய் இந்த படத்தில் வேற லெவலில் இருப்பதாகவும், அந்த இடைவேளை காட்சிகள் அற்புதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் அவர் பேசும் நெல்லை பாஷை நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

yaanai

yaanai

மேலும் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள துணை கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு வலு சேர்த்துள்ளனர்.

yaanai

yaanai

ஆக மொத்தம் முழுக்க முழுக்க ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக ரசிகர்களை திருப்தி அடைய வைத்துள்ளது. அந்த வகையில் ஒரு வெற்றிக்காக போராடி வந்த அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.

yaanai-review-arun-vijay-2

yaanai-review-arun-vijay-2

Continue Reading
To Top