‘பாகுபலி’ பிரபாஸின் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.‘பாகுபலி’ மூலம் உலக அளவில் புகழ்பெற்று விட்டார் பிரபாஸ். அதுவும் குறிப்பாக தமிழ் மற்றும் ஹிந்தியில் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

எனவே, தன்னுடைய அடுத்த படமான ‘சாஹு’வை, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கிறார். இந்தப் படத்தில், ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அருண் விஜய்யும் நடிக்கலாம் என முதலில் கூறப்பட்டது. நாமும் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தோம்.ArunVijay-Next Movie-Director

தற்போது அந்தத் தகவல் உண்மையாகியிருக்கிறது. அருண் விஜய்யே அதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் கேரக்டரா என்ற தகவல் தெரியவில்லை.