என்னை அறிந்தால் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அருண்விஜய். இவர் தற்போது குற்றம்-23 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நடந்த SIIMA விருது விழாவில் இவருக்கு சிறந்த வில்லன் நடிகர் விருது கொடுக்கப்பட்டது.

மேடையேறி விருது பெற்ற இவர் கொஞ்சம் எமோஷ்னலுடனே பேசினார்.இதில் ‘கண்டிப்பாக இது உழைப்புக்கு கிடைத்த வெற்றி, அது மட்டுமில்லாமல் ஒரு நண்பனாக, சகோதரனாக என்னை ஊக்கப்படுத்தியவர் அஜித் சார்.

அவருக்கு நன்றி, மேலும், எனக்கு ஆதரவு தந்த அஜித் ரசிகர்களுக்கும் மிகவும் நன்றி’ என கூறியுள்ளார்.