Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண் விஜய்யை நெகிழச்செய்த தல ரசிகர்கள்.! என்ன செய்துள்ளார் தெரியுமா.!
சினிமாவில் பல நடிகர்கள் எப்போது வாய்ப்பு கிடைக்கும் நமது திறமையை வெளிக்காட்ட என காத்துக் கொண்டிருக்கிறார்கள், பல நடிகர்கள் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ajith-viswasam
இப்படிப் பட்ட கஷ்டங்களை தாண்டி தான் நடிகர் அருண் விஜய் கடந்து வந்தார் இவர் அஜித்துடன்நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார், அஜித்தின் படம் தான் இவரை வெளிக்கொண்டு வந்தது.
என்னை அறிந்தால் படம் மட்டும் இல்லாமல் அவர் நடித்த சில படங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது தற்போது ரிலீசாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்திலும் அருண் விஜய்யின் நடிப்பு ஆகா ஓகோ என பேசப்படுகிறது.
இந்த நிலையில் அருண்விஜய் மலேசியாவில் இருக்கும் அஜித் ரசிகர்களை சந்தித்துப் பேசியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அருண் விஜய்.
Thanks for the love guys! @Thalafansml !! was nice meeting you’ll.. keep up the good work.. #Malaysia .. love to all ?? pic.twitter.com/BK2VgAhzvb
— ArunVijay (@arunvijayno1) October 7, 2018
