அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் அருண் விஜய். பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் கடந்த சில வருடங்களாக தான் இருக்கு சினிமா கைகொடுத்துள்ளது.
அதில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கிறது. விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகு அருண்விஜய் வேற லெவெலுக்கு சென்றுவிட்டார். அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்தார்.
அதே சமயத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வெற்றி கொடுத்தார். ஹீரோவாக இவர் வெற்றி பெற்றதற்கு மகிழ்திருமேனி மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்துள்ளது.
அதனால் தற்போது விறுவிறுவென முன்னணி நடிகராக வளர்ந்து வரும் அருண் விஜய் அடுத்ததாக பக்கா காமெடி மற்றும் சென்டிமென்ட் இயக்குனரான ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
மொழி, பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதாமோகன் அடுத்ததாக மலேசியா டூ அம்னீஷியா என்ற படத்தை இயக்கியுள்ளார். வைகோ மற்றும் வாணிபோஜன் நடித்துள்ள இந்த படம் வருகிற மே 28-ஆம் தேதி நேரடியாக ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த படம் வெளியான பிறகு அருண் விஜய் மற்றும் ராதா மோகன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது என்கிறார்கள். இது முழுக்க முழுக்க காமெடி படமா அல்லது காமெடி கலந்த ஆக்ஷன் படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.